Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமராட்டிய மாநில கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

    மராட்டிய மாநில கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

    மராட்டிய மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

    இதனிடையே தொடர் கனமழை காரணமாக, மராட்டிய மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோதாவரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், வெள்ளம் குறைந்து வருவதாக மராட்டிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அம்பேத்கர் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், இன்று மாலைக்குள் வெள்ளப்பெருக்கின் தீவிரம் குறையக் கூடும். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    கனமழையின் காரணமாக, மராட்டிய மாநிலத்தில் உள்ள சீதாராம ராஜு, கோனசீமா மற்றும் எலுரு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் அரசால் திறக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அவசரநிலையைச் சமாளிக்க பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    ஒரே நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....