Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18ம் தேதி திறப்பு

    தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18ம் தேதி திறப்பு

    கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் (ஜூலை) 18ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடந்தது. ஜூன் மாதம் முடிந்த செமஸ்டர் தேர்வுகளை அடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்ததன் படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-22 கல்வியாண்டுக்கான கோடை விடுமுறைக்குப் பின், வருகிற 18ம் தேதி திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....