Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இரவின் நிழல் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

    இரவின் நிழல் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

    நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை பாராட்டி ரஜினி காணொளி வெளியிட்டுள்ளார். 

    நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் தான், இரவின் நிழல். இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் திரைப்படத்தில் வரலட்சுமி, பிரிகடா, ரோபோ சங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து தமிழ் நடிகர் ரஜினிகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அக்காணொளியில் அவர் பேசியதாவது :

    பார்த்திபன், வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எப்போதும் ஏதாவது செய்யத் துடிக்கிற கலை ரசிகர். உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்திடாத நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இது. 29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம். இந்தப் படம் மிகவும் நன்றாகப் போகும். 

    மேற்கூறியவாறு ரஜினிகாந்த் கூறினார். 

    ரஜினியின் இக்காணொளியானது இரவின் நிழல் திரைப்படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....