Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல்

    ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல்

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து 10வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆறு பேர்களில் ஒருவரான ரவிச்சந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொள்ளவும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும் கடந்த வருடம் 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விண்ணப்பித்தார்.

    ரவிச்சந்திரனின் கோரிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்தநிலையில், தமிழக அரசின் அனுமதியுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி 30 நாள் பரோலில் வெளிவந்தார்.

    இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கு 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தயார் ராஜேஸ்வரியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதின் காரணமாக, அவர் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில், ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாள்கள் கூடுதலாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மனுநீதிச் சோழன் மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம்…- நீதிபதி கருத்து!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....