Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமனுநீதிச் சோழன் மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம்...- நீதிபதி கருத்து!

    மனுநீதிச் சோழன் மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம்…- நீதிபதி கருத்து!

    ‘நீதிபதிகள் துறவிகள் அல்ல… சில நேரங்களில், பணிச்சுமை காரணமாக நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது மாதிரியான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறேன். அந்த தருணத்தில், நான் கோபமாக பேசிய வார்த்தைகள், சிலரை புண்படுத்தி இருக்கலாம்; அதற்காக, இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றியே தீர்ப்பு வழங்குகிறோம். அந்தத் தீர்ப்பு, ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், இன்னொரு தரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகராஜ் ராவ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை, விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில், நாகராஜ் ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகளின் தீர்ப்புகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதை, எத்தனையோ வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இதற்கு முன்னும் ஓய்வு பெறும் நிலையில், நீதிபதிகள் சிலர் வழங்கிய தீர்ப்புகள், இன்றும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன.

    பேரறிவாளனை விடுதலை செய்யும் முன், ராஜிவ் காந்தியுடன் பரலோகம் போன காவல் துறை அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் மற்றும் உடல் சிதறி சின்னாபின்னமாகி, கரிக்கட்டையாகி இறந்து கிடந்தவர்களின் குடும்பத்தினரை பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறிதும் கவலைப்படவில்லை என்பது தான் உண்மை; அது தான் பொதுமக்களுக்கு பெரும் வருத்தம் தருவதாக உள்ளது.

    ‘நாட்டாமை தீர்ப்பை மாற்று’ என, கிராமங்களில் பஞ்சாயத்து பண்ணும் பேர்வழிகளை மிரட்டுவது போல, உச்ச நீதிமன்ற நீதிபதியை யாரும் மிரட்ட முடியாது. நீதிபதிகளை துறவிகள் என மட்டும் அல்ல… கடவுள்கள் என்று அழைக்கவும் முடியாது. ஏனெனில், கடவுள் வழங்கும் தீர்ப்பு எப்போதும் நியாயமானதாகவே இருக்கும். சாட்சிகள் எதிராக இருந்தால், கற்புக் கரசியரையும் நெறி கெட்டவர்கள் என்று தீர்ப்பு வழங்கியோரும் உண்டு. இவர்களுக்கு தேவை சரியான சாட்சி மற்றும் ஆதாரங்கள் தான்.

    வக்கீல்களின் வாக்கு சாதுர்யத்தால், எத்தனையோ குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டும் இருக்கின்றனர். நீதிபதிகளே லஞ்சம் வாங்கி கைதாகும் கொடுமையும், நம் நாட்டில் நடக்கிறது. அப்புறம் எப்படி எல்லா நீதிபதிகளும், மனுநீதிச் சோழன் மாதிரி, பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குவர் என்று எதிர்பார்க்க முடியும். எல்லாம் அவரவர் தலைவிதியே! ஒரு நாள் இந்த நிலை கண்டிப்பாக மாறக்கூடும் என்று நம்புவோம்.

    ஒற்றைக் காலினை சிறுமிக்கு பரிசளித்த சோனு சூட்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....