Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைகோத்தபய ராஜபக்சே ராஜிநாமா- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

    கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    இப்போராட்டத்தின் விளைவாக இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இருப்பினும், மக்களின் போராட்டமானது ஓயவில்லை. 

    இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் நீடித்த நிலையில், ஜூலை 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். 

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், ரணில் விக்ரம சிங்கேவும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். 

    கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ஜூலை மாதம் 13-ம் தேதி ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தது.

    இந்நிலையில், இலங்கையில் ஜூலை மாதம் 13-ம் தேதி அன்று அவசர நிலையை அமல்படுத்தப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார். 

    இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ஜூலை 15 அன்று பதவி விலகினார் என்றும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே, கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

    ராஜிநாமா செய்து தப்பி ஓடினாரா கோத்தபய ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....