Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? - அன்புமணி ராமதாஸ்

    சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி ராமதாஸ்

    சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

    வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது

    இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட்.. ரசிகர்கள் கனவு பலிக்குமா?

    கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை இதுவாகும். அக்டோபர் 20-ஆம் தேதி 3 பேர், 27-ஆம் தேதி 7 பேர், கடந்த 6-ஆம் தேதி 15 பேர், இப்போது 14 பேர் என மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக சிங்களக் கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது!

    சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது; மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்; இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா?

    மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்கஅத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....