Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட்.. ரசிகர்கள் கனவு பலிக்குமா?

    சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட்.. ரசிகர்கள் கனவு பலிக்குமா?

    சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடத்தில் அபரிவிதமாக உள்ளது. நடைபெறவுள்ள நான்கில் ஒரு டெஸ்ட் பகலிரவு ஆட்டமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மூன்று பகலிரவு டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன. மேலும், தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. 

    அதன்படி, முதல் டெஸ்ட் சென்னை அல்லது நாகபுரி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் ஏதாவதொன்றிலும் 2- வது டெஸ்ட் தில்லியிலும் 3-வது டெஸ்ட் தர்மசாலாவிலும் 4-வது டெஸ்ட் ஆமதாபாத்திலும் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    சென்னை சேப்பாக்கம் மைதானம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய தோற்றுத்துடன் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதினால் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்கமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....