Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு குறித்த மாநில அளவிலான திறன் மேம்பாட்டுப் பணிமனையை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

    இந்த ஒருநாள் பணிமனையில் ஆந்திரா ,தெலுங்கான, புதுச்சேரி,அந்தமான் மற்றும் தமிழ்நாடு சேர்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். ரேஷன் அட்டை விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்ககூட்டுறவு வார விழாவையொட்டி ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற பயிற்சி முகாம்…

    உணவு பொருட்கள் விலை ஏற்றம் இருந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருள் வழங்குவதில் எந்த சிரமம் இருக்கக் கூடாது என சிறப்பான திட்டத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

    விலை வசூல் மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்ததற்காக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறைக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    விலைகளைக் கண்காணிப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலையை நியாயமான வரம்பிற்குள் வைத்திருப்பதற்கான முதல் படியாகும், இது அரசாங்கத்தின் அத்தியாவசிய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் விலைகள் பற்றிய தரவு, கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த பயலுரக நிகழ்ச்சியில் தேசிய தகவல் மைய இயக்குநர் நடராசன். உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்கட்விட்டர் மற்றும் மெட்டா வரிசையில் இணைந்த அமேசான்; 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....