நடிகர் விஜய் குரலில் வெளிவந்துள்ள ரஞ்சிதமே பாடல் யூடியூப் தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்பட பணிகளில் பிஸியாகவுள்ளார். வாரிசு திரைப்படத்தை தோழா, மகரிஷி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் வாரிசு திரைப்படமானது குடும்ப திரைப்படமாக உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளிவந்தது. தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகர் விஜய், பாடகி மானசி பாடியிருக்கிறார்கள். இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். வெளியானதிலிருந்து இணையத்திலும், ரசிகர்களிடத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் ரஞ்சிதமே பாடல், யூடியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், ரஞ்சிதமே பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
ரஞ்சிதமே பாடல் வேறு பாடல்களின் பிரதி போல இருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் வந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட்.. ரசிகர்கள் கனவு பலிக்குமா?