Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடிடியில் வெளியாகும் காந்தாரா; ரிலீஸ் தேதி அறிவிப்பு

    ஓடிடியில் வெளியாகும் காந்தாரா; ரிலீஸ் தேதி அறிவிப்பு

    பல தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டைப் பெற்ற காந்தாரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சமீப காலமாகவே கன்னடத்தில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் நற்பெயரை சம்பாதித்து வருகின்றனர். உதாரணத்திற்கு கே.ஜி.எஃப், 777 சார்லி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் இணைந்த திரைப்படம், காந்தாரா. இத்திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

    ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த சில நாள்களில் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டன. 

    இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் காந்தாராவைப் பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில், காந்தாரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்கஅத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....