Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா80 ஆயிரம் பேருக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு: மத்திய ரயில்வே துறை அறிவிப்பு

    80 ஆயிரம் பேருக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு: மத்திய ரயில்வே துறை அறிவிப்பு

    ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் மிக முக்கிய பிரதான சேவையாக ரயில் பயணம் இருந்து வருகிறது. இந்த சேவையை ஒரு நாளைக்கு பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. இதில், களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் அனைவரும் 67 ஆயிரம் கிலோ மீட்டர் தூர இருப்புப் பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே இப்பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    மேலும் அவர், ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலமாக, ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 2,500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 50 மில்லியனை கடந்த விஜய்யின் பாடல்; ஆர்ப்பரிக்கும் ரீல்ஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....