Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாளை விண்ணில் செல்ல காத்திருக்கும் நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்

    நாளை விண்ணில் செல்ல காத்திருக்கும் நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்

    நாட்டின் முதலாவது தனியார் ராகெட் நாளை விண்ணில் செலுத்தப்படும் என ‘ஸ்கைரூட் ஏரோஸ்பெஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. 

    முன்னதாக இந்திய நாட்டின் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 19 தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியது. 

    விண்வெளித்துறையில் தனியார் துறை பங்கேற்பதனை எளிமையாக்க கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஹைதிராபத்தை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் இந்த புதிய ராக்கெட்டை தயார் செய்துள்ளது. 

    இந்திய வெண்வெளித்து திட்டத்தின் நிறுவனர் ‘விக்ரம் சாராபாய்’ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த புதிய ராக்கெட்டுக்கு ‘விக்ரம்-எஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    ராக்கெட் ஏவப்படும் சரியான தேதி, வானிலை பொறுத்தே அமையும் என்றும், அதனை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தெரிவித்திருந்து. இதன்படி ராக்கெட் ஏவுதலை இம்மாதம் 18 தேதியை முடிவு செய்தது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11.30 மணியவில் விக்ரம்-எஸ் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வணிக நோக்கத்திற்காக இந்த ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ள 2.5 கிலோ எடையுள்ள பன்-சாட்  என்ற செயற்கைக்கோளும் இடம்பெற்றுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்திய, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். 

    இதன்மூலம் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முதல் இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் நிறுவனம் பெற
    இருக்கிறது.

     

    இதையும் படிங்கதடைகளை தாண்டி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ‘ஆர்டெமிஸ் 1’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....