Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்தடைகளை தாண்டி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் 'ஆர்டெமிஸ் 1'

    தடைகளை தாண்டி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ‘ஆர்டெமிஸ் 1’

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ் 1’ ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

    அமரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது. இது மனிதகுல வராலற்றில் மிகப் பெரிய சாதனையாக அமைந்தது. 

    இந்நிலையில், மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஆர்டெமிஸ்’ என்ற திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

    இந்த திட்டத்தின் முதல் முதற்கட்ட சோதனையாக செயற்கையான மனித மாதிரிகளை வைத்து ‘ஆர்டெமிஸ் 1’ ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பியுள்ளது. இந்த ராக்கெட் ஓரியன் என்று விண்கலத்தை சுமந்து செல்கிறது. 

    முன்னதாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்த சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதிலிருந்து அடுத்தடுத்த பல இயந்திர மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் சோதனை முயற்சி ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், நேற்று நவம்பர் நள்ளிரவு ராக்கெட்டை செலுத்த தயாரான போது 6 மணி அநேரம் முன்பாக, ராக்கெட்டில் திடீரென ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டறியப்பட்டது. பிறகு, இந்த வாயு கசிவை சரி செய்யும் பணியில் சிவப்பு குழு எனப்படும் பணிக்குழு தொடர்ந்து செயல்பட்டது. 

    இதையடுத்து ராக்கெட்டுக்குள் 37 லட்சம் லிட்டர் அளவுக்கு குளிர்விக்கப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று மதியம் 12.17 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. 

    விண்ணில் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பிறகு, ராக்கெட் தனியாக பிரிந்து ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்கசர்வதேச சட்ட விதி மீறல்கள்: ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....