Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு நிவாரண உதவி- மம்தா பானர்ஜி அறிவிப்பு

    கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு நிவாரண உதவி- மம்தா பானர்ஜி அறிவிப்பு

    கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்று கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரியில் திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்து வந்த 12 தொழிலாளர்கள் இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

    இதையடுத்து, மாவட்ட பாதுகாப்பபு படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய மீட்பு படையினரும் நேற்று காலை இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    இந்தச் சம்பவத்தில் 8 தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து தொடர்ந்த தேடுதல் பணியில் 3 உடல்கள் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டன. மேலும் ஒருவரை காணவில்லை என்பதால் அவரைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. 

    இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என தெரியவந்தது. இந்நிலையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்ததோடு, 5 பேரின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....