Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுல்லை பெரியாறு அணை பராமரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்...

    முல்லை பெரியாறு அணை பராமரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்…

    முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

    முன்னதாக கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அம்மாநில வனத்துறை கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும் திடீரென அந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. 

    அதேபோல், முல்லை பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பகுதியில் சாலை அமைக்கவும் கேரள அரசு இன்னுமும் அனுமதி அளிக்கவில்லை. 

    இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “முல்லை பெரியாறு அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட ஏற்கவே அளிக்கப்பட அனுமதியை மீண்டும் பெற்று தர வேண்டும். அதேபோல், வல்லக்கடவு வழியாக செல்ல 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளது. 

    மேலும் “அணையின் பராமரிப்பு பணிக்கு தேவையான கட்டுமான இயந்திரங்களை எடுத்து செல்லவும், அணை அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வுகளை கந்கநாய்க்க கருவிகள் அமைக்கவும், அதேபோல் அங்குள்ள பழைய படகுகளுக்கு பதில் புதிய படகுகளை பயனப்டுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. 

    இதையும் படிங்கராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....