Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

    ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

    கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். 

    வேலூரில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனை கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக வளாகத்தில் ஓட வைத்ததோடு, சில சகிக்க முடியாத சம்பவங்களை நிகழ்த்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத் பார்த்த பெற்றோரும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

    மேலும் இது சம்பந்தப்பட்ட மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில்,  சீனியர் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை மேற்கோள்காட்டி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட எஸ்.பி. அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

    அதில், “ராக்கிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும். ராகிங் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கசென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல்! கட்டையால் தாக்கி கொண்ட நிர்வாகிகளால் பரபரப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....