Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிய நான்கு பேர் கைது...

    மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிய நான்கு பேர் கைது…

    திருவாண்டார் கோவில் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை-நாகப்பட்டினம் இடையே நான்கு வழி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது விழுப்புரம்-புதுச்சேரி இடையே திருவண்டார் கோவில் பகுதியில் மேம்பாலம் அமைக்க இரும்பு தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அங்குள்ள இரும்பு ராடுகள், தளவாடங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் திருடு போயின. இது குறித்து கட்டுமான மேற்பார்வையாளர் மதன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 24), முகமது நிஜமுல்லா (21), முகமது சாலிவர் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி திருவண்டார்கோவிலில் உள்ள பழைய இரும்புக் கடையில் விற்றது தெரியவந்தது.

    அதனைதொடர்ந்து இரும்புக் கடையின் உரிமையாளர் நடராஜன் (60) என்பவரிடம் விசாரணை நடத்தி இரும்புக் கம்பிகளை பறிமுதல் செய்து அவரை சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கைது செய்தார்.

    இதையும் படிங்க:நகைத் திருட்டில் மத்திய இணை அமைச்சருக்கு தொடர்பா? 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த பரபரப்பு தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....