Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநகைத் திருட்டில் மத்திய இணை அமைச்சருக்கு தொடர்பா? 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த பரபரப்பு தகவல்

    நகைத் திருட்டில் மத்திய இணை அமைச்சருக்கு தொடர்பா? 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த பரபரப்பு தகவல்

    நகைத் திருட்டு வழக்கில் மேற்கு வங்கத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை மத்திய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக்கை கைது செய்ய வேண்டும் என அலிபுர்தௌர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நகைக் கடை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராக வேண்டும் என்று மேற்கு வங்கத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை மத்திய இணை அமைச்சராக இருக்கும் நிஷித் பிரமானிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வடக்கு வங்கத்தின் அலிபுர்தௌர் நீதிமன்றம் உத்தரவிட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

    இதனிடையே, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, நிஷித் பிரமானிக்கும் வரவில்லை; அவரது தரப்பு வழக்கரிஞரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து அலிபுர்தௌர் நீதிமன்றம் உத்தரவிட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    அதே சமயம் அடுத்த விசாரணை டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும் அப்போது நிதிஷ் பிரமானிக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 

    இதையும் படிங்க: சர்வதேச சட்ட விதி மீறல்கள்: ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....