Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபெட்ரோலுக்காக சென்ற இடத்தில் 11 பேர் பலி ...அதிர்ச்சியில் மக்கள்

    பெட்ரோலுக்காக சென்ற இடத்தில் 11 பேர் பலி …அதிர்ச்சியில் மக்கள்

    பெட்ரோல் லாரி ஒன்று வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மிசோரம் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி, மிசோரமின் அய்சாவல் மாவட்டத்தில் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தால், லாரியில் இருந்த பெட்ரோல் தரையில் ஆறென வேகமெடுத்தது. 

    இந்த பெட்ரோல் ஆற்றை கண்டவர்கள், விறுவிறுவென பாத்திரங்களை தூக்கியபடி பெட்ரோலை சேகரிக்க ஓடிச்சென்றுள்ளனர். அப்போது, லாரி திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்தது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 

    மேலும், அந்த லாரிக்கு அருகில் இருந்த வாடகை கார் ஒன்றும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன. இச்சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

    மிசோரம் காவல்துறை இந்த விபத்து கூறியதாவது;

    இந்த சம்பவத்தில் லாரியின் அருகே சாலையின் நடுவில் நின்றிருந்த நபர் ஒருவர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை எரிய விட்டுள்ளார். அந்த நெருப்பு பரவி, லாரி வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அந்த நபர் தனது தவறை ஒப்பு கொண்டுள்ளார். 

    மேலும், அந்த நபர் கவனம் இல்லாமல் நடந்து விட்டது என அவர் கூறியுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றுள்ளோம்.

    இவ்வாறு காவல்துறை கூறியுள்ளனர்.

    இதையும் படிங்கசர்வதேச சகிப்புத்தன்மை தினம், பாமக இளைஞர் அணி தலைவர் ஜி.கே.மணி அறிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....