Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலை ஏன் அவசியம்?

    காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலை ஏன் அவசியம்?

    காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

    தில்லியில் கடந்த மே மாதம் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டதாக அவரது காதலன் அப்தாப் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை மீட்பதால், இறந்தது அவர்தானா என்பதை உறுதி செய்ய முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர். 

    தற்போது தேடுதலில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஷ்ரத்தாவின் தலை அல்லது மண்டை ஓடு கிடைத்தால், ஸ்கல் சூப்பர் இம்போசிஷன் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தில் காவல்துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர். 

    ஷ்ரத்தாவின் மண்டை ஓட்டை தொழில்நுட்ப முறையில் பதிவேற்றம் செய்து, முக அமைப்பு கொடுக்கப்பட்டு, இது யாருடைய மண்டை ஓடு என்பதனை கண்டறிய முடியும். இந்த முறையை அடிப்படையாக வைத்து தான் ஹிட்லரின் உடல் பாகங்களை வைத்து அது அவர் தான் என நீருபிக்கப்பட்டது. 

    மேலும் இந்தச் சம்பவத்தில் பல உண்மைத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷ்ரத்தாவின் காதலனான அப்தாப்பை காவல்துறையினர், அவர் எங்கெங்கு உடல் பாகங்களை வீசினாரோ அங்கெல்லாம் சென்று தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி சத்தர்பூர் வனப்பகுதியில் ஷ்ரத்தாவின் சில உடல் பாகங்கள் கிடைத்ததாகவும், அவை ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணு வைத்து உறுதிப்படுத்த ஆய்வகத்துக்கு அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கொலை செய்த காதலன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசியதோடு, அவரது தலையை குளிர்பதன பெட்டியில் வைத்து, தினமும் ஷ்ரத்தாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும் கொலையாளிக்கு வீடு வாடகை பிடித்து கொடுத்த நபர் முதல் குற்றவாளி மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நெருங்கிய உறவினர்கள் என அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....