Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்பி.ஆர்.டி.சி யில் 10 வருட அரியர் தொகையை வழங்க கோரி தனி நபராக நூதன போராட்டம்...

    பி.ஆர்.டி.சி யில் 10 வருட அரியர் தொகையை வழங்க கோரி தனி நபராக நூதன போராட்டம்…

    பி.ஆர்.டி.சி யில் பணிபுரியும் ஊழியருக்கு 10 வருட அரியர் தொகை வழங்க கோரி தனி ஒரு நபராக அலுவலகத்தில் வாயில் முன் அமர்ந்து அத்தியாவாசிய பொருட்களை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் எனப்படும் பி.ஆர்.டி.சி நிர்வாகத்தில் ரமேஷ் என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 10 வருடமாக அரியர் தொகை வழங்கப்படவில்லை.

    இது குறித்து அதிகாரியிடம் பல முறை முறையிட்டோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் அதிகாரிகளை கண்டித்தும், அரியர் தொகை உடனடியாக வழங்க கோரி ஊழியர் பி.ஆர்.டி.சி அலுவலகத்தின் வாயில் முன்பு அமர்ந்து வீட்டிற்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறேன் என்றும், அத்தியாவசிய பொருட்களை முன்வைத்து அரியர் பணம் வழங்க கோரி நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்கமுல்லை பெரியாறு அணை பராமரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....