Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி அடைந்த தினம்: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்...

    அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி அடைந்த தினம்: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்…

    புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி அடைந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னை சமாதியை தரிசித்தனர்.

    ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கியவர் அன்னை. பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878ம் ஆண்டு, பிப்., 21ம் தேதி பிறந்த அன்னையின் இயற்பெயர் “மீரா அன்போன்ஸா’ இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1914ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, புதுச்சேரிக்கு வருகை புரிந்தார்.

    அன்னையின் பெரும் முயற்சியால் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டது. 1973ம் ஆண்டு நவ., 17ம் தேதி, புதுச்சேரியில் அன்னை உயிர் நீத்தார். ஆண்டுதோறும் அவரது மகா சமாதி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறைகள், பக்தர்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

    மேலும் அவருடைய சமாதியும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புதுச்சேரி, தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, அன்னையின் சமாதியில் வழிபாடு நடத்தி விட்டுச் சென்றனர். மேலும் அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய் அறைகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதையும் படிங்ககூட்டுறவு வார விழாவையொட்டி ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற பயிற்சி முகாம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....