Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்டெம்போ பர்மிட் வழங்குவதில் குளறுபடி; போராட்ட களத்தில் குதித்த ஓட்டுனர்கள்

    டெம்போ பர்மிட் வழங்குவதில் குளறுபடி; போராட்ட களத்தில் குதித்த ஓட்டுனர்கள்

    புதுச்சேரியில் இயக்கப்படும் 135 டெம்போக்களில் 60 டெம்போக்களுக்கு மட்டும் புதுச்சேரி முழுவதும் இயக்க பர்மிட் வழங்கப்பட்டுள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பேருந்து நிலையம் முன்பு 50 க்கும் மேற்பட்ட டெம்போ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் 135 டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, ஜய்யங்குட்டி பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய 4 வழித்தடங்களில் டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெம்போக்களுக்கான பர்மிட் புதுப்பிகப்படும் நிலையில் 60 டெம்போக்களுக்கு மட்டும் புதுச்சேரி முழுவதுமாக இயக்க சமீபத்தில் போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது.

    மேலும் புதுச்சேரி முழுவதுமாக டேம்போக்கள் இயக்கப்படுவதால் டெம்போ ஓட்டுனர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக கூறி 50-க்கும் மேற்பட்ட டெம்போ ஓட்டுனர்கள் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி முழுவதும் இயக்க வழங்கிய பர்மிட்டை ரத்து செய்து பழைய நிலையில் உள்ள வழித்தடத்தில் டோம்போக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; அதிமுக அன்பழகன் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....