Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்று மக்கள் பணியாற்றிய சென்னை மேயர் பிரியா!

    முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்று மக்கள் பணியாற்றிய சென்னை மேயர் பிரியா!

    மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அந்தவகையில் தென் சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியாவும், ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு காசிமேடு துறைமுகம் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக மேயர் பிரியாவும் ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

    அவர்களின் வாகனம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், முதல்வரின் கார் துறைமுகத்திற்கு உள்ளே வர தொடங்கியதை தெரிந்துகொண்ட இருவரும் நடக்கத் தொடங்கியதாகவும், அப்போது முதல்வரின் வாகனம் வேகமாக செல்லத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
    இதைக்கண்ட மேயரும் ஆணையரும் முதல்வரின் கான்வாயில் ஏறி தொங்கிய நிலையில் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

    மாண்டஸ் புயல் பாதிப்பால் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....