Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பொதுவெளியில் நடனம் ஆடிய ஜோடி; 10 ஆண்டுகள் தண்டனை விதித்த அரசு!

    பொதுவெளியில் நடனம் ஆடிய ஜோடி; 10 ஆண்டுகள் தண்டனை விதித்த அரசு!

    ஈரானில் பொதுவெளியில் நடனம் ஆடிய பெண்ணுக்கும், பெண்ணின் வருங்கால கணவருக்கும் 10.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் அரசு கைது செய்தும், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

    இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். 

    இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து, அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 10.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் முக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    மேலும், ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனமாடக்கூடாது என்ற விதியும் இருப்பதாக கூறப்படுகிறது. 

    சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகளில் பெரிய வித்தியாசம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....