Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகளில் பெரிய வித்தியாசம்

    சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகளில் பெரிய வித்தியாசம்

    சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

    அதேநேரம், சீனாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில்  5.7 அலகுகளாக மட்டுமே பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட் சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் மலையும் பாலையும் சேர்ந்த பகுதியாகும். இப்பகுதியில் மக்கள் குடியிருப்பு குறைவாக இருக்கும். அதேநேரம், சீனாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் இப்பகுதியும் ஒன்றென கூறப்படுகிறது. 

    மேலும், இந்த நிலநடுக்கத்தின் அளவுகள் குறித்த தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இபிஎஸ் அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஓபிஎஸ் பதில் மனு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....