Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவாட்ஸ்-அப் விதிமுறை மீறல்: இந்தியாவில் லட்சக்கணக்கில் கணக்குகள் முடக்கம்!

    வாட்ஸ்-அப் விதிமுறை மீறல்: இந்தியாவில் லட்சக்கணக்கில் கணக்குகள் முடக்கம்!

    இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறியதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    வாட்ஸ்-அப் செயலி உலக முழுவதும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையம் என்று வந்துவிட்டால் வாட்ஸ்-அப் என்பது அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு வாட்ஸ்-அப் இடம் பிடித்துள்ளது. இதற்கென தனிப் பயனர்கள் ஏராளம்.

    இளைஞர் முதல் பெரியவர் வரை இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம், இந்தச் செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த வாட்ஸ்-அப் இந்தியாவிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

    மேலும் இதில் 13,89,000 வாட்ஸ்-அப் கணக்குகளை எந்தவித முன் அறிவிப்பு இன்றி வாட்ஸ்-அப் நிறுவனம் முடக்கி உள்ளது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 26.85 லட்சம் கணக்குகளை வாட்ஸ்-அப் நிறுவனம் முடக்கியுள்ளது.  

    இபிஎஸ் அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஓபிஎஸ் பதில் மனு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....