Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'சாகும்வரை தூக்கிலிட வேண்டும்' - போக்சோ வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    ‘சாகும்வரை தூக்கிலிட வேண்டும்’ – போக்சோ வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    மூன்று வயது பெண் குழந்தையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை சாகும்வரை தூக்கிலிடும்படி உத்தர பிரதேச போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 

    உத்தர பிரதேச மாநிலம், முசாப்பர்நகரில் உள்ள ஜன்சத் டவுன் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை. இந்தப் பெண் குழந்தையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சோனி என்கிற சுரேந்தரும் ராஜேஷும் இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொடூரமாக தாக்கினர். 

    பிறகு, மயக்கநிலையில் இருந்த அந்தக் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சுரேந்தர் மற்றும் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் மீதும் கடத்தல், கொலை செய்தல், குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளிலும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போக்சோ நீதிமன்றம், சோனி என்கிற சுரேந்தரை சாகும் வரை தூக்கில் இட வேண்டும் எனவும், மற்றொரு குற்றவாளியான ராஜேஷுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை கொடுத்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    வாட்ஸ்-அப் விதிமுறை மீறல்: இந்தியாவில் லட்சக்கணக்கில் கணக்குகள் முடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....