Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 100 பேருக்கு தூக்கு தண்டனையா?

    ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 100 பேருக்கு தூக்கு தண்டனையா?

    ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் அரசு கைது செய்தும், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

    அந்த வகையில், தற்போது 18 வயதை பூர்த்தியடையாத சிறுவர்கள் இருவருக்கு ஈரான் அரசு தூக்குத் தண்டனை விதித்துள்ளதாக ஈரானின் நீதித் துறை இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது.

    முன்னதாக, ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 100 பேருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இந்த தகவல்கள் குறித்து ஈரான் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....