Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல்..

    ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல்..

    ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதால், தற்போது அவர் தன் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் அரசு கைது செய்தும், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

    இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான சாரா காதிப் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார்.

    சாரா காதிப் ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதைத்தொடர்ந்து,  சாரா காதிப்பிற்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. 

    இதனால், ஈரானுக்கு சாரா காதிப்பை வரவேண்டாம் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சாராவுக்கு நெருக்கமானவர்கள் ஈரான் அரசால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது சாரா ஸ்பெயினில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புத்தக கண்காட்சியில் ஸ்டால் குளறுபடி; கண்டனம் தெரிவித்த பதிப்பாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....