Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுத்தக கண்காட்சியில் ஸ்டால் குளறுபடி; கண்டனம் தெரிவித்த பதிப்பாளர்

    புத்தக கண்காட்சியில் ஸ்டால் குளறுபடி; கண்டனம் தெரிவித்த பதிப்பாளர்

    சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் ஒதுக்கப்படவில்லை என்று சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளரும் எழுத்தாளருமான நரன் பப்பாசி அமைப்பிற்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்துள்ளார். 

    சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி  நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நாளை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடங்கவுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக அரசும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் (பப்பாசி) இணைந்து நடத்துகின்றன. 

    இந்நிலையில், புத்தக கண்காட்சியில் ஸ்டால் ஒதுக்கப்படுவதில் குளறுபடிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பதிப்பாளர்களுக்கு புத்தக கண்காட்சி என்பது மிக முக்கியமான விடயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டால் குளறுபடிகள் குறித்த தகவல்கள் மனவேதனையாக இருப்பதாக பதிப்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

    சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் கேட்டதற்கு பப்பாசி அமைப்பு ஸ்டால் கொடுக்க மறுத்து விட்டார்கள் என்று சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளரும், எழுத்தாளருமான நரன் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; 

    பப்பாசி அமைப்பிற்கு வன்மையான கண்டனங்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் சால்ட் பதிப்பகத்திற்கு ஸ்டால் கேட்டு அவர்கள் கொடுக்க  மறுத்து விட்டார்கள் . சர்வதேச புத்தக கண்காட்சியும் இதனோடே நடப்பதால் புதியவர்களுக்கு தர முடியாதாம்.

    கடந்த 10 நாட்களாக நாள் தவறாமல் தினமும் சென்று – Non member -க்கான Application Form – யைக் கேட்டு வந்தேன். அவர்கள் முதல் நாளிலிருந்து தர முடியாது என்பதையே பதிலாக சொல்லி வந்தார்கள். அப்ளிகேஷன்  கொடுக்கவும் மறுக்கிறார்கள். மெம்பர்களுக்கு  மட்டும் தான் அனுமதியாம் .

    ஆனால் மெம்பர் இல்லாத நிறைய பேருக்கு / அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஸ்டால் வழங்கியிருக்கிறார்கள். கேட்டால் 15 வருடம் அவர்களோடு பயணம் செய்திருக்க வேண்டுமாம்.

    900- க்கும் மேற்பட்ட ஸ்டால்களில்  உறுப்பினராக இருக்கும் அந்த 400 பேருக்கு மட்டும் தான் அனுமதியாம். எல்லோருக்கும் ஒரே நீதியில்லை.

    நேற்று வெறுமெனே கடந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு  அவசர அவசரமாக15 புத்தகங்கள் மட்டும் பதிப்பித்த புதிய  பதிப்பாளருக்கும்  வழங்கியிருக்கிகறார்கள். காரணம் அவர்களுக்கு அணுக்கமானவர்கள் .

    ஐனநாயக முறையில் non member க்கான அப்ளிகேசன் கொடுத்து குலுக்கல் முறையில் ஸ்டால் கொடுக்க பல முறை கேட்டாகி விட்டது. அப்படி எந்த வழக்கத்தையும் அவர்கள் கையாளவில்லை.

    சங்கத்தில் பொறுப்பிலிருப்பவர்களே  வெவ்வேறு பெயரில் பதிப்பகங்களை பதிவு செய்து ஒவ்வொரு வரிசையிலும் அவர்கள் ஸ்டால் எடுத்து வைத்துள்ளார்கள். புதிய மெம்பராக யாரையும் சேர்க்க மறுக்கிறார்கள்.

    ஏன் புதியவர்கள் யாரும் மெம்பராகக் கூடாதா?

    அங்கு கடைப்போடக் கூடாதா ?

    எந்த வெளிப்படைத்தன்மையுமில்லை. இது எப்படி சரியான அமைப்பாக இருக்க முடியும். தங்களுக்கு விருப்பமானவர்களளுக்கு கொடுத்துக் கொள்வதற்கு எதற்கு அரசிடம் பணம் வாங்க வேண்டும்.

    இந்த அமைப்பினர் சூறையாடி செல்வதற்குத் தான் நம் தமிழக முதல்வர் இந்த அமைப்புக்கு பல கோடிகள் உதவி செய்தாரா…?

    பப்பாசி அமைப்பில் இந்த ஆண்டு பொறுப்பிலிருப்பவர்களுக்கு, குறிப்பாக அப்ளிகேஷன் கேட்டு செல்பவர்களை அவமரியாதை செய்யும்  செயலாளர் முருகனுக்கு என் வன்மையான கண்டனங்கள். இவங்க கடை கொடுக்கலானா  புத்தகம்  விற்காதா … நல்ல புத்தகம் போட்டா எப்படியும் விற்கும். பார்த்துக்கலாம்.

    என்று தெரிவித்துள்ளார். 

    தில்லியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு பாதிப்பு; தமிழகத்தின் நிலை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....