Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசர்வதேச யோகா தினம்; உங்களுக்கான பிரத்யேக கட்டுரை இதோ!

    சர்வதேச யோகா தினம்; உங்களுக்கான பிரத்யேக கட்டுரை இதோ!

    இன்று சர்வதேச யோகா தினம்: ஏன் யோகா தினம் கொண்டாடப்படுகிறது..?

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. சந்தேகமின்றி, யோகா உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றை சமநிலையில் கொண்டு வருகிறது.

    யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது, சுவாச நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    சர்வதேச யோகா தினம் உருவான வரலாறு :

    பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும், 2019-ம் ஆண்டு ராஞ்சியிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.

    மேலும் யுஜ் என்ற வார்த்தையிலிருந்தே யோகா என்ற வார்த்தை மறுவி வந்துள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பது என்ற பொருள் உண்டு. இதற்கு பல அர்த்தங்கள் தரப்படுகின்றன. ஆனால், அனைத்தையும் தொடர்புப்படுத்துவது ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையே ஆகும். ஆசனங்கள், உடற் பயிற்சி ஆகியவற்றை மேற்கோள் காட்டுவதற்கே யோகாசனம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

    யோகா செய்வதினால் கிடைக்கும் பயன்கள்:

    மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும். ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு – இவற்றில் எதைத்தேடினாலும். உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும்.

    யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது. ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன.

    முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

    யோகா தின நிகழ்ச்சிக்கள் :

    இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதையொட்டி யோகான தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகான தினத்தின் போது பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

    இது தவிர ஜூன் 21-ந்தேதியில் இருந்து 25 நாள் முன்பாகவே சர்வதேச யோகா தின ‘கவுன்டவுன்’ தொடங்குகிறது. இதன்படி வருகிற 27-ந்தேதி ஐதராபாத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யோகா தினத்தின் போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சுமார் 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா தொடர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், யோகாசன நிபுணர்கள், ஆர்வலர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் என்ன?

    ‘மனிதகுலத்திற்கான யோகா’ என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும். தொற்றுநோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் கடினமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நமது மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அத்தகைய சூழ்நிலையில் யோகாவைத் தழுவுவது அவசியமாகிவிட்டது.

    யோகா மனதில் உள்ள தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையும் உடலில் உள்ள நச்சுகளையும் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க முடிவா? வேதாந்த நிறுவனம் சொன்னது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....