Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅஸ்வினுக்கு கொரோனா; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்..!!

    அஸ்வினுக்கு கொரோனா; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்..!!

    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து செல்வதற்கான விமானத்தினை இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தவறவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஜூன் 16ம் தேதி அன்று இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்து சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்ற வருடம் இங்கிலாந்துடனான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா, இங்கிலாந்து சென்றிருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

    பின்னர், கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தள்ளி வைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

    இந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமல்லாது, மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா பங்கு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த நிலையில், போட்டிக்கு முன்னதாகவே கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்வின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருப்பினும் தொடருக்கு முன்னதாக உடல் நலம் தேறி தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு உள்ளது.

    சென்ற வருடம் நடந்த இந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய அணிக்கேப்டனாக விராட் கோலி பதவி வகித்திருந்தார். ஆனால் தற்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சென்றுள்ளது. அயல் நாடுகளில் ரோஹித் சர்மா டெஸ்ட் கேப்டனாக விளையாடப்போகும் முதல் போட்டி இதுவேயாகும்.

    இந்த போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியானது, ஒரு பயிற்சி ஆட்டத்தில் லெய்செஸ்டெர்ஷைர் என்ற அணியுடன் ஜூன் மாதம் 24ம் தேதி விளையாடவுள்ளது. 

    திங்கள் கிழமையன்று இந்திய கிரிக்கெட் வாரியமானது இந்திய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளியினை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க முடிவா? வேதாந்த நிறுவனம் சொன்னது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....