Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்; பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

    நாடு முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்; பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

    அக்னிபாத் திட்டம் தொடர்பாக, முப்படைகளின் தளபதிகளை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில், இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து கொண்டு வருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு வகையில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. 

    இதன், ஒரு பகுதியாக கடந்த வாரத்தில் ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று, அதிகமான ரயிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றும் பல்வேறு மாநிலங்களில் 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், 223 விரைவு ரயில்கள் அடக்கம். மேலும், சில ரயில்களை மாற்று பாதைகளில் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படுவதால், இதனை தடுக்க அங்கு செல்ல முடியாதபடி, இரயில் நிலையங்களில் பல்வேறு முறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

    இதன்காரணமாக, இரயில் போக்குவரத்து பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பயணிகள் பல மணி நேரங்களாக இரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த இராணுவ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு வருகின்ற 24 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில்தான் கடந்த ஆண்டுகளில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.  

    இதனிடையே அக்னிபாத் திட்டம் தொடர்பாக, தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகளை இன்று, பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை பற்றிய முக்கிய பேச்சுவார்த்தைகளி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    அஸ்வினுக்கு கொரோனா; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....