Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்சர்வதேச கரலாகட்டை தினம்; 1000-க்கும் மேற்பட்டோர் கரலாகட்டை சுற்றி உலக சாதனை

    சர்வதேச கரலாகட்டை தினம்; 1000-க்கும் மேற்பட்டோர் கரலாகட்டை சுற்றி உலக சாதனை

    சர்வதேச கரலாகட்டை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரலாகட்டை சுற்றும் நிகழ்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கரலாகட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர்.

    வருடாவருடம் டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினமாக கொண்டாடப்படுகிறது, தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும், இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஜோதி சத்ரிய குருகுலம் சார்பில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கரலாகட்டை சுற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை புதுச்சேரி மாநில சட்டபேரவை தலைவர் செல்வம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் கரலாகட்டையை சுற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். இதில் 9 வகையான மெய்பாடம் அசைவுகலை 972 முறையும் 5 வகையான கரகலாகட்டைகளை 270 முறையும் சுற்றப்பட்டது.

    மேலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிகளவிலான நபர்கள் கரலாகட்டை சுற்றியது இதுவே முதல் முறை என்பதால் இவர்களை கவுரவபடுத்தும் விததில் அஸிஸ்ட் வெர்ல்ட் ஆஃப் ரிகார்ட் சார்பில் கரலாகட்டை சுற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்வாகவும் பதிவு செய்யப்பட்டது.

    விறுவிறுப்பான கட்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை; அரையிறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....