Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஷால் நடிப்பில் வெளிவந்த லத்தி திரைப்பட டிரெயலர்..

    விஷால் நடிப்பில் வெளிவந்த லத்தி திரைப்பட டிரெயலர்..

    விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. 

    தமிழ் திரைப்பட நடிகரான விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. கடைசியாக வெளிவந்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் சறுக்கலையே சந்தித்தது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்-2  போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், லத்தி திரைப்படம் இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வினோத் குமார் இயக்கியுள்ள லத்தி திரைப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

    விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சுனைனா நாயகியாக நடித்துள்ளார். 

    சென்னையை சேர்ந்தவருக்கு ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம்…குவியும் பாராட்டுகள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....