Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு...

    கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…

    ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதின் நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. 

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் ஜப்பானில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் அங்கு 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில் ஜனவரி 10-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதின் நாமினேஷன் பட்டியலுக்கு ஆர்ஆர்ஆர் தேர்வாகியுள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத) பிரிவிலும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இத்திரைப்படம் தேர்வாகியுள்ளது.

    இதனால், படக்குழு மட்டுமன்றி ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆஸ்கருக்கு அடுத்த படியாக திரைத்துறையின் மிக உயரிய விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    விஷால் நடிப்பில் வெளிவந்த லத்தி திரைப்பட டிரெயலர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....