Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவை கண்டித்து அதிமுக சார்பில் 14 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு

    திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் 14 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு

    திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் 14 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    விடியா தி.மு.க. அரசைக் கண்டித்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று, கீழ்க்கண்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு 21.12.2022 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும்.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. அரசைக் கண்டித்து, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டம், வேலூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய இருப்பதாகக் கிடைத்த தகவலையொட்டி, மேற்கண்ட மாவட்டங்களுக்கு மட்டும் 13.12.2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 21.12.2022 – புதன் கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, அனைத்து ஒன்றியங்களிலும் 14.12.2022 அன்றும்; ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16.12.2022 அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....