Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மீண்டும் குஜராத் முதல்வரானார் பூபேந்திர படேல்; உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்

    மீண்டும் குஜராத் முதல்வரானார் பூபேந்திர படேல்; உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்

    குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் வெற்றிபெற்றதை அடுத்து முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துண்டு சிறப்பித்தனர்.

    குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றதை அடுத்து ,அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியை தொடர்ந்து குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக பூபேந்திர படேல் தேர்தெடுக்கப்பட்டார்.இதனையடுத்து அவர் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்-ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இந்நிலையில் குஜராத் தலைநகர் காந்திநகரில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவில் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்கள் பூபேந்திர படேல் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்ததை அடுத்து, பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து, ஷர்ஷ் சங்கவி, ஜகதீஷ் விஸ்வகர்மா, நரேஷ் படேல், உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை செயலகத்தில் புதிய அமைச்சருக்காக தயாராகி வரும் அறை! வருகிற 14-ஆம் தேதி அமைச்சராகிறாரா உதயநிதி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....