Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு

    இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு

    இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, காவல் உதவி அதிகாரி, இளநிலை உதவி அதிகாரி போன்ற 766 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது. 

    இந்தப் பணியிடங்களுக்கான தகுதி என்பது பணியை பொறுத்து மாறுபடும். வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களில் சமையலர் பணிக்கு மட்டும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சமையலர் தவிர்த்து மற்ற அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

    ஊதியமாக மாதம் ரூ.21,700 முதல் ரூ1,51,100 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    அதன் பின்பு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மேலும் அறிய கீழ்காணும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அனுகவும் :https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf

    நீட் தேர்வுக்கான பாடங்களின் சுமையால் அரியலூர் மாணவி தற்கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....