Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கான பாடங்களின் சுமையால் அரியலூர் மாணவி தற்கொலை

    நீட் தேர்வுக்கான பாடங்களின் சுமையால் அரியலூர் மாணவி தற்கொலை

    நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அரியலூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    அரியலூர் ரயில்வே குடியிருப்புக்கு அருகில் வசிக்கும் நடராஜன்-உமாராணி தம்பதியின் மகள் நிஷாந்தி. இவர் பன்னிரண்டாம் வகுப்பில் 430 மதிப்பெண்களை பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற நிஷாந்தி தோல்வி அடைந்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு நிஷாந்தி தன்னை தயார்படுத்திக் கொண்டுவந்தார். இந்நிலையில், நிஷாந்தி நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

    இச்சம்பவத்தை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், நிஷாந்தி எழுதிய கடிதத்தை கைப்பற்றியனர்

    இக்கடிதம் குறித்து அரியலூர் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: 

    தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும். நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளது. வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தனது கடிதத்தில் நிஷாந்தி குறிப்பிட்டுள்ளார். 

    மேற்கூறியவாறு அரியலூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

    இந்தியா முழுவதும் நாளை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கனமழை எதிரொலி: நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....