Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எதிரொலி: நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை எதிரொலி: நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. மேலும் நீலகிரியின் பல பகுதிகளில் மழையால் அதிக குளிரும் ஆங்காங்கே மண்சரிவும், மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. 

    இதன்காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மீட்புப் பணிகளுக்கு 04232223828, 9789800100 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

    தொடர் கனமழை காரணமாக நேற்று  ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் விடுமுறை அறிவித்திருந்தார். 

    இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அம்ரித், இன்று (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....