Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்...

    இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. 

    இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், ஜாவா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பிற்பகல் 1.07 மணிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது, ஜெம்பர் ரீஜென்சிக்கு தென்மேற்கு 284 கி.மீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் இந்தோனேசியா மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    இதைத்தொடர்ந்தும், இந்தோனேசியாவில் சுனாமிக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. முன்னதாக, இந்தோனேசியாவில் கடந்த நவம்பர் 21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    உலகச் சாம்பியன் ஆவதே தனது இலக்கு! அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரத்தியானந்தா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....