Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது; மாவட்ட ஆட்சியர் வல்லவன்

    புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது; மாவட்ட ஆட்சியர் வல்லவன்

    புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் வல்லவன் பேட்டியளித்துள்ளார்.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என இந்திய வானொலி ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழையை எதிர்கொள்ள தலைமைச் செயலர் பொறுப்பு வகிக்கும் நிதி செலாளர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் தலைமை செயலகத்தில் பேரிடர் மேலாண்மை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் கனமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து அரசுத் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார். இதில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வல்லவன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த மண்டலமாக மற வாய்ப்பு உள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது. இதனால் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கனமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 2, காரைக்காலுக்கு ஒன்று என 3 தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப கேட்டுள்ளோம் என்றும், நாளை அவர்கள் வந்துவிடுவார்கள்.

    மீன்பிடிக்க சென்ற அனைவரும் கரை திரும்ப கூறியுள்ளோம் என்றும், 2353 படகுகள் கரை திரும்பியுள்ளன. 163 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 24 மணி நேரமும் செல்பட கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி 24 மணிநேரமும் செயல்படும் என்றும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரம் மருத்துவ குழுவினர் பணியில் இருப்பர் என கூறிய அவர், புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வனத்துறை, தீயணைப்பு துறைக்கு 5 லட்சம், உணவு வழங்க குடிமைப்பொருள் துறைக்கு 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    மகான் அரவிந்தரின் 72-வது நினைவு நாள்; ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் நேரில் அ‌ஞ்ச‌லி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....