Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்கார்த்திகை தீப விழாவில் மாவளி சுற்றியிருக்கிறீர்களா? மறந்து வரும் மாவளியை நினைவு படுத்திய மாணவர்கள்

    கார்த்திகை தீப விழாவில் மாவளி சுற்றியிருக்கிறீர்களா? மறந்து வரும் மாவளியை நினைவு படுத்திய மாணவர்கள்

    தலைமுறை மறந்த கார்த்திகை தீப திருநாளில் மாவளி சுற்றுதலை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் கிராம சிறுவர்களுக்கு மாவளி சுற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    தமிழர்களின் பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை மாதம் தீப விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீப விழாவின் போது தங்களின் வீடுகளில் பனைமரத்தின் கூக்கானை வைத்து தயாரிக்கப்படும் மாவளியை வைத்து படைத்து குடும்பத்தினர் அனைவரும் மாவளி சுற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

    விஞ்ஞான மயமாதல் காரணமாக இந்த மாவளி சுற்றும் மரபு பலரிடத்தில் மறைந்து வருகிறது. எனவே இந்த மாவளி சுற்றுவதை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் தற்போது உள்ள தலைமுறையினர் மறந்த பனை மரத்தின் பயன்களையும் கார்த்திகை நன்னாளில் மாவளி சுற்றும் அவசியத்தை வலியுறுத்தி சின்ன வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் உள்ள சிறுவர்களிடம் பல்கலைக்க கூட பேராசிரியர் அருண் நாகலிங்கம் மற்றும் மாணவர்கள் எடுத்துக் கூறினர்.

    அப்போது பனை மரத்தில் ஏரி கூக்கான் பறித்து மாவாக்கி மாவளி செய்தனர். பின்னர் மாவளி செய்வது எப்படி என்பது குறித்தும், அவற்றை சுற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் தமிழக மற்றும் புதுச்சேரியில் பனை மரத்தின் எண்ணிக்கை அழிவின் விளிம்பில் உள்ளது மரத்தின் அவசியத்தை நாம் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் மற்ற மரக்கன்றுகளை நம் நட்டு பராமரிப்பது போன்று பனைமரத்தையும் நட்டு வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....