Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி...

    பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி…

    சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்தார். 

    பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லாலு பிரசாத்தின் மகளான ரோகினி ஆச்சார்யா தாமாக சிறுநீரக மாற்று அறுவை செய்ய முன்வந்தார். 

    இந்நிலையில், அவருக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் லாலு பிரசாத் யாதவிற்கு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

    அறுவை சிகிச்சை முடிந்து லாலா பிரசாத் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

    இதனிடையே, லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்தார். 

    மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  

    வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி; தொடரை தக்கவைக்குமா இந்தியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....