Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைபழந்தமிழர்கள் கொண்டாடிய கார்த்திகை தீபம்; மாவளியும் சொக்கப்பனையும்

    பழந்தமிழர்கள் கொண்டாடிய கார்த்திகை தீபம்; மாவளியும் சொக்கப்பனையும்

    நாம் நம் தமிழர் வரலாற்றில் மறந்த ஒரு விளையாட்டாக தற்போது மாறியிருப்பது மாவளி என்று சொல்லப்படும் மா ஒளி. கார்த்திகை தீபம் என்றால் வெறும் தீபம் ஏற்றி வழிபடுவது மட்டுமல்ல. இந்த நன்நாளில் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து ஆடி பாடி மகிழ்வதும் விளையாடுவதும் அடங்கும். அதற்கு சான்றாக தான் இந்த கார்த்திகை மாதத்தில் விளையாடப்படும் பழம்பெருமையான மா ஒளி விளையாட்டு. 

    கார்த்திகை திருநாள் வருவதற்கு ஓரிரு வாரம் முன்பாகவே இந்த மாவளி தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் கிராமங்களில் தொடங்கிவிடும். ஆண், பெண் பனை மரம் எது என்று தேட தொங்கிடுவர் சிறுவர்கள். அப்படி தேடி கண்டு பிடித்து அந்த மரத்தின் கீழ் இருக்கும் பூக்களை சிதறாமல் சேகரித்து வைப்பர். தனக்கு என்று செய்யப்படுவதோ ஒன்று தான். இருப்பினும் நான் சேகரித்து அதிகமா இல்லை.. நீ சேகரித்தது அதிகமா? என்ற போட்டியில் அதிகம் சேகரித்து ஏச்சு வாங்கிய சிறுவர்களின் காலங்கள் சென்றுவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். 

    இன்றைய காலகட்டத்தில் கிராம புறங்களிலும் இந்த விளையாட்டு குறைந்து கொண்டே வருகிறது. காரணம், அது செய்யவது சற்று கடினமாக தோன்றுகிறதோ என்னவோ? சிலருக்கு அதன் மீது ஆர்வம் குறைந்துவிட்டது என்னவோ? இல்லை அதைப்பற்றி சொல்ல கூட இங்கு யார் இருக்கிறார் என்பது கூட காரணமாக கருதலாம். அதே சமயம், இப்போதெல்லாம் தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்துக்கும் செயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுக்கு தான் மவுஸ் அதிகம். அதற்கென்று பட்டாசு தயாரிப்பையும் குறைவு சொல்வதற்கு இல்லை. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தானே அவர்களும் செய்வார்கள்.

    உண்மையில் மாளி (மாவளி) என்று சொல்லப்படும் மா ஒளி எதற்காக சுற்றப்படுகிறது தெரியுமா? 

    கார்த்திகை மாதத்தில் பொதுவாகவே குளிரும் சற்று சாரல் மழையும் காணப்படும் மாதமாகும். இந்த மாதத்தில் விடிந்த பிறகும் சூரியன் மறையும் நேரத்திற்கும் முன்பாகவும், அதாவது காலையிலும் மாலையிலும் அதிகமாக கும்மென்ற இருட்டாகவே இருக்கும். 

    இந்த சமயத்தில் நாம் தீபங்கள் ஏற்றுவதன் மூலம் இயற்கையோடு ஒன்றிணைந்து கொண்டாடும் மனமகிழ்வு கிடைக்கும். இதையே தான் நம் முன்னோர்கள் செய்து வந்து இருக்கின்றனர். 

    மாவளி தயார் செய்வது எப்படி?

    பனை மரத்தின் பூவினை நன்கு காயவைத்து பிறகு, அதை நன்றாக பொடியாக்கி மெல்லிய துணியயில் வைத்துக்கொள்வார்கள். பிறகு பனை மட்டைகளை எடுத்து அதன் மெல்லிதாக கிழித்து அதன் நடுவே இந்த துணியால் ஆன பொட்டலத்தை வைப்பார்கள். பிறகு அதற்கு நெருப்பிட்டு சுற்றினால் தீப்பொறிகள் பறக்கும். நீள்வட்டத்திலும், வட்டத்திலும் பறக்கும் தீப்பொறிகளைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. பெரியர்வர்களும் சிரியவர்களும் மாவளியை சுற்றி மகிழ்வர். குட்டி குழந்தைகளாக இருந்தால் அவர்களை நடுவே வைத்துக்கொண்டு பெரியவர்களும் இதனை சுற்றி மகிழ்வர். 

    maavoli

    சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம்:

    பொதுவாக இந்த கார்த்திகை தீபத் திருநாளில் ஊர் நடுவிலோ அல்லது கோயில் வாசலிலோ இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, மரம் போன்று பெரிய மரத் தண்டினை நட்டு வைத்து, அதன் நான்கு புறங்களிலும் பனை ஓலைகளை கட்டி வைத்து சுற்றி கட்டிய பிறகு அதனை கொளுத்தி மகிழ்வார்கள். சொக்கன் ஆகிய ஈசனை ஆதியும் அந்தமும் இல்லாத நெருப்பாக வழிபாடு செய்வர். 

    கார்த்திகை தீபம்:

    குறிப்பாக கார்த்திகை திருநாளனான பௌணர்மி தினத்தில் வீட்டு வாசலிலும், மாடியிலும் மாடங்களிலும், தோட்டங்களிலும் குப்பை மேட்டிலும், கிணற்று அல்லது நீர்நிலைகள் அருகேயும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுவர். பெரியர்வகள் அனைவரும் சொக்கப்பனை கொளுத்தி மகிழ்வர். பிறகு சிறுவர் சிறுமியர் மாவளி சுற்றி விளையாடுவர். 

    பாட்டும் கேளியும்:

    சுற்றும் பொழுது மாவளியோ மாவளி 

    மாவளி காரன் பொண்டாட்டி மாவு இடிக்க போனாலாம்…

    இடிச்ச அரிசிமாவுல

    எட்டுருண்ட செஞ்சாலாம்..

    எனக்கு ரெண்டு தந்தாலாம்…

    என மெட்டுக்கட்டி முறை மாமன் மற்றும் முறைப் பெண்கள் மெட்டுக்கட்டி பாட்டு பாடுவது உண்டு. பாட்டு பாடியும் கேளிக்கை வைத்தும் கொண்டாடி மகிழ்வர். இது புத்துணர்ச்சியை தரக்கூடியதாகவும் நன்மையை தரக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது. 

    தமிழர் வரலாறு சொல்லும் கார்த்திகை தீபம்: 

    இந்த வழக்கம் நீண்டகாலமாக வழக்கில் இருப்பதை, மாவளி சுற்றும் காட்சி பாறை ஓவியத்தில் காணப்படுவதன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சியைக் காணலாம்.

    மேலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இளகிய நூல்களில் இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. 

    என்னதான் நாம் நம் தமிழரின் பெருமையை மறந்து வந்தாலும், இதுபோன்ற விழாக்காலங்களில் நம் இது போன்ற மாவளி விளையாட்டுகளை மறந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்கு ஊட்டி சென்றிட வேண்டும் என்பதே பலரின் நல்லெண்ணம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....