Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மகான் அரவிந்தரின் 72-வது நினைவு நாள்; ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் நேரில் அ‌ஞ்ச‌லி

    மகான் அரவிந்தரின் 72-வது நினைவு நாள்; ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் நேரில் அ‌ஞ்ச‌லி

    அர‌வி‌ந்த‌ரி‌ன் 72-வது ‌நினைவு நாளையொ‌ட்டி பு‌து‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ள்ள அர‌வி‌ந்த‌ர் ஆ‌‌சிரம‌த்‌தி‌‌ற்கு நாடு முழுவது‌‌ம் இரு‌ந்து ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் வ‌ந்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

    மகான் அரவிந்தர், 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். ஆன்மீகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, 1910-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தார். பின்னர் இங்கு ஆன்மிக தேடலில் ஈடுபட்ட அவர், அரவிந்தர் ஆசிரமத்தையும் கட்டினார். தனது ஆசிரமத்திலேயே போதித்து்வந்த அவர் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.

    இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மகான் அரவிந்தரின் நினைவு தினத்தையொட்டி அன்றைய தினம் உள்நாடு மமட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் புதுச்சேரி வந்து நீண்ட வரிசையில் நின்று அரவிந்தர் சமாதியை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இன்று மகான் அரவிந்தரின் 72-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த மக்கள் கலந்துகொண்டு அரவிந்தருக்கு நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அர‌வி‌ந்த‌ர் ம‌ற்று‌‌ம் அ‌‌ன்னை ஆ‌கியோ‌ர் பய‌ன்படு‌த்‌திய அறைக‌ள் ப‌க்த‌ர்க‌‌ளி‌ன் த‌ரிசன‌த்து‌க்கான ‌‌திற‌ந்து வைக்கப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை தீபத் திருவிழா; பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் காவல்துறையினர் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....