Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்திருவண்ணாமலை தீபத் திருவிழா; பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் காவல்துறையினர் 

    திருவண்ணாமலை தீபத் திருவிழா; பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் காவல்துறையினர் 

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 12 ஆயிரம் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இதைத்தொடர்ந்து இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை மலையில் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்திற்கு தேவையான 4,500 லிட்டர் நெய், 1050 மீட்டர் காடா துணியும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் தீப கொப்பரையும் பூஜை செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மனைக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் இருக்கும் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ளது. 

    இதனிடையே லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வார்கள் என்பதால், காவல்துறையினர் தரப்பில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 12 ஆயிரம் காவல்துறையினர் மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    துணிவு அப்டேட்; டிசம்பர் 9-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....